கோவையில் கறிக்கோழி கிலோ ரூ.280-க்கு விற்பனை
கோவையில் கறிக்கோழி கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை
திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலை பகுதியில் இருந்து கோவைக்கு கறிக்கோழி அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கறிக்கோழி விலை அதிகரித்து வருகிறது.
இதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி ரூ.220-க்கும், கடந்த வாரம் ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் கிலோவுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.280 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கறிக்கோழி வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் கறிக்கோழிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் இடத்திலேயே இறந்து விடுகின்றன.
மேலும் எடையும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கறிக்கோழி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மேலும் பொது மக்களிடம் கறிக்கோழி நுகர்வும் அதிகரித்து உள்ளது. என்றார்.
இதேபோல் நாட்டுக்கோழி கிலோ ரூ.480-க்கும், ஆட்டுக்கறி கிலோ ரூ.800-க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story