தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 7 March 2022 11:36 AM IST (Updated: 7 March 2022 11:36 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

போக்குவரத்துக்கு இடையூறு 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தப்பக்கம்பையில் இருந்து கொணவக்கரை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இங்கு நெடுஞ்சாலைதுறை சார்பில் பணிக்காக கட்டுமானப் பொருட்கள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்கள் சாலை முழுவதும் அடைத்து வைத்தாற்போல உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டு வருவதால் விபத்தும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டு உள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.
கிருஷ்ணன், தப்பகம்பை.

சாக்கடை கழிவுநீர்

  ஊட்டி எல்க்ஹில் பகுதியில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இன்டர்லாக் கற்கள் முழுவதும் கழிவுநீர் வழிந்தோடுவதால் மேடான பகுதியில் செல்லும் வாகனங்கள் பிரேக் பிடித்தாலும் நிற்பதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. கழிவுநீர் வழிந்தோடுவதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஜெகநாதன், எல்க்ஹில், ஊட்டி.

திடீர் பள்ளம்

  ஊட்டி கமர்சியல் சாலையில் நடைபாதை சீரமைக்கப்பட்டு இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது. இதில் நகராட்சி மார்க்கெட் பகுதியில் நடைபாதையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லும் போது சிலர் தடுமாறி விழுந்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே நடைபாதையை மீண்டும் சீரமைக்க வேண்டும்.
  கீதா, கிரீன்பில்டு, ஊட்டி.

கழிப்பறை வசதி இல்லை

  கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகில் மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த படாமல் உள்ளது. இதன் காரணமாக மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே விளையாட்டு வீரர்களுக்கு தனியாக கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சுரேஷ், காந்திபுரம்.

அடிப்படை வசதி இல்லை

  சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சாமி கோவில் பின்புறம் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தை செயல்படும்போது ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறி வாங்கி செல்கிறார்கள். ஆனால் இந்த சந்தையில் குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சந்தையில் போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்..
  சுகன்யாதேவி, சுல்தான்பேட்டை.



  
தினத்தந்தி செய்தி எதிரொலி:
சாலையில் இருந்த குழி சரிசெய்யப்பட்டது

  கோவை சத்தி ரோடு கணபதியை அடுத்த அத்திப்பாளையம் பிரிவு சிக்னல் அருகே சாலையின் நடுவில் 2 இடங்களில் குழி இருந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப் பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குழியை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  சந்தோஷ்குமார், கணபதி.

ரேஷன்கடையில் தரமற்ற அரிசி

  கோவை மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட சிவசக்தி காலனியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கணபதி புதூரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். ஆனால் இந்த கடையில் கடந்த 3 மாதமாக தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கேட்டால் சரியான பதிலை கூறுவது இல்லை. இதனால் ரேஷன் கடையில் அரிசி வாங்கும் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
  துரைசாமி, கணபதிபுதூர்.

பஸ் வசதி வேண்டும்

  சூலூர் தாலுகாவை சேர்ந்த பதுவம்பள்ளியில் இருந்து சூலூருக்கு சென்றுவர போதிய பஸ்வசதி இல்லை. இதனால் சோமனூர் சென்று பின்னர் அங்கிருந்து சூலூர் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சூலூரில் இருந்து பதுவம்பள்ளி வழியாக அன்னூருக்கு பஸ் இயக்கினால் பயனாக இருக்கும். அதை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
  சசி, பதுவம்பள்ளி.

வீணாகும் குடிநீர்

கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டில் சிறுவாணி குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாய் பழுதடைந்து பல நாட்கள் ஆகிறது. ஆனால் அதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வராததால் குடிநீர் வீணாக சென்று வருகிறது. இது குறித்து பல முறை அதிகாரி களை சந்தித்து புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் அங்கு சாக்கடை போன்று தேங்கி கிடக்கிறது. இதனால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் இதுபோன்று குடிநீர் வீணாக செல்வதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.
முருகானந்தம், போத்தனூர்.
 
1 More update

Next Story