வடசென்னை பகுதியில் 4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்; புழலில் இருந்து தண்ணீர் வழங்க மாற்று ஏற்பாடு
பராமரிப்பு பணி காரணமாக வடசென்னை பகுதியில் 4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புழலில் இருந்து தண்ணீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் வருகிற 11-ந் தேதி காலை 10 மணி வரை 4 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வடசென்னை பகுதிகளான மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு 4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாற்று ஏற்படாக புழலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 300 மில்லியன் லிட்டர் குடிநீர் மேற்கண்ட பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் 11-ந் தேதி காலை 10 மணி வரை வழங்கப்படுகிறது.
அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுகொள்ளலாம். திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1-ம் பகுதி என்ஜினீயரை 81449-30901 என்ற செல்போன் எண்ணிலும், மணலி பகுதியினர் 2-ம் பகுதி என்ஜினீயர் 81449-30902 என்ற எண்ணிலும், மாதவரம் பகுதியினர் 3-ம் பகுதி என்ஜினீயர் 81449-30903, வியாசர்பாடி, பட்டேல் நகர் பகுதி பொதுமக்கள் 4-ம் பகுதி என்ஜினீயர் 81449-30904 என்ற எண்ணிலும், இதுதவிர தலைமை அலுவலக புகார் பிரிவு 044-4567 4567, 044-2845 1300 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று சென்னை குடிநீ்ர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story