மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
திருக்குறள் முற்றோதல் செய்த 14 மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சி துறையால் ஆண்டுதோறும் ஆட்சிமொழி பயிலரங்க கருதரங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆட்சிமொழி கருத்தரங்கத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்துகொண்டு 2018-ம் ஆண்டில் ஆட்சிமொழி் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய நெடுஞ்சாலை கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை, உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு கேடயம், 2019-ம் ஆண்டில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுந்தரமூர்த்திக்கு முதல் பரிசு தொகை ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையையும், திருப்போரூர் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுரேஷ் என்பவருக்கு 2-ம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
அது போல மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊர் நல அலுவலர் நிலை - 1 பிரமிளாவுக்கு 3-ம் பரிசுத்தொகையாக ரூ.1000-க்கான காசோலை மற்றும் திருக்குறள் முற்றோதல் செய்த 14 மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சந்தானலட்சுமி, செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை கல்லூரி, தமிழ்த்துறை தலைவர் அரிகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கான தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற வத்சலா சேதுராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். காஞ்சீபுரம் மாவட்டத்தின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் உதவியாளர் கோமதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story