கோவையில் கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது


கோவையில் கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 7 March 2022 9:29 PM IST (Updated: 7 March 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மருந்து பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது.

கோவை

டெல்லியில் இருந்து கோவைக்கு மருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி வந்தது. அந்த லாரி ஆவாரம்பாளையம் பகுதியில் நின்றிருந்த நிலையில், திடீரென்று லாரியில் முன் பகுதியில் தீ பிடித்து எரிந்தது.

 இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

கன்டெய்னர் லாரியின் முன் பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது  குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story