கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த தச்சுத்தொழிலாளி கொலை வழக்கில் மகனும் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த தச்சுத்தொழிலாளி கொலை வழக்கில் மகனும் கைது
x
தினத்தந்தி 7 March 2022 9:38 PM IST (Updated: 7 March 2022 9:38 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் விவகாரத்தில் தச்சுத்தொழிலாளி கொலை செய்யப் பட்ட வழக்கில் மகனும் கைது செய்யப்பட்டார்.

கோவை

கள்ளக்காதல் விவகாரத்தில் தச்சுத்தொழிலாளி கொலை செய்யப் பட்ட வழக்கில் மகனும் கைது செய்யப்பட்டார்.  

கள்ளக்காதல் விவகாரம்

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 55). தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார் (30) உள்பட 2 மகன்கள் உள்ளனர். 

 நாராயணசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இதை அறிந்த ராஜேஸ்வரி தனது கணவரை கண்டித்து உள்ளார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. 

நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார்

இந்த நிலையில் நீலிக்கோணாம்பாளையத்தில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் ராஜ்குமாரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த நாராயணசாமி, தனது கள்ளக்காதலியையும் அழைத்து வந்து உள்ளார். 

இதை பார்த்த ராஜேஸ்வரியும், மகன் ராஜ்குமார் ஆகியோர் கடும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அவரிடம் ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

குத்தி கொலை

பின்னர் கோவிலில் இருந்து நாராயணசாமி வீட்டுக்கு சென்றார். அப்போது மனைவி ராஜேஸ்வரி, மகன் ராஜ்குமாரும் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் வைத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரி, ராஜ்குமார்  ஆகியோர் சேர்ந்து நாராயணசாமியை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். 

இதில் நாராயணசாமியின் மர்ம உறுப்பிலும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த நிலையில் மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சி நடக்கும் போது வீட்டிற்கு சென்ற 3 பேரையும் நீண்டநேரமாக காணவில்லையே என்று நாராயணசாமியின் சகோதரர் ரவிக்குமார், அவர்களை தேடி வீட்டுக்கு சென்றார். 

மனைவி சரண்

அப்போது ரத்த வெள்ளத்தில் நாராயணசாமி இறந்து கிடப்பதையும், ரத்தகாயங்களுடன் தாயும், மகனும் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே இந்த கொலையை தான் மட்டும் செய்ததாக கூறி ராஜேஸ்வரி சிங்காநல்லூர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். 

மகனும் கைது

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ராஜ்குமாருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து அவரை  போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 


Next Story