வால்பாறையில் மிளகு பறிக்கும் பணி தொடங்கியது
வால்பாறையில் மிளகு பறிக்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கு விற்பனை அங்காடி அமைத்துதர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் மிளகு பறிக்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கு விற்பனை அங்காடி அமைத்துதர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேயிலை தோட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வால்பாறை மலைப்பகுதியில் பணப்பயிர்கள் என்று அழைக்கப்படும் தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. இதில் ஆரம்ப காலத்தில் காபி மட்டுமே பயிரிடப்பட்டது. காபி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயன்தரக்கூடியது என்பதால் தோட்ட நிர்வாகங்கள் காபி தோட்டங்களை அழித்து விட்டு ஆண்டு முழுவதும் பயன்தரக்கூடிய தேயிலையை பயிரிட்டனர்.
தற்போது வால்பாறை பகுதியில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தேயிலை தோட்டங்களில் மண் அரிப்பை தடுப்பதற்காகவும், நிழல் தருவதற்காகவும் சவுக்கை மரங்களை நட்டு வைத்துள்ளனர். மேலும் சவுக்கை மரங்களை பயன்படுத்தி ஊடுபயிராக மிளகு கொடிகளை தோட்ட நிர்வாகங்கள் பயிரிட்டுள்ளனர். இதில் கரிமுண்டா மற்றும் பன்னியூர் என்ற 2 வகையான மிளகு கொடிகளை பயிரிட்டுள்ளனர்.
மிளகு பறிக்கும் பணி
இந்த நிலையில், மிளகு கொடியில் மிளகு கொத்து, கொத்தாக காய்த்்து தொங்குகிறது. வால்பாறை பகுதியில் போதியளவிலான மழை கிடைத்ததால் வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு மிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்தினர் மிளகு பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, வெளிச்சந்தையில் ஒரு கிலோ மிளகு ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.
விற்பனை அங்காடி
குறிப்பாக மலைவாழ் கிராமங்களிலும் மிளகு உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் வால்பாறை பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்குள் வாழ்ந்து வரும் மலைவாழ் கிராம மக்கள் வனத்துறையின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் அதிகளவில் மிளகு சாகுபடி செய்துள்ளனர்.
இவர்கள் மிளகுகளை பறித்து கால்நடையாக வால்பாறை நகருக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது.
இதனால் வனத்துறையின் சார்பில் மலைவாழ் மக்களுக்கு என தனி விற்பனை அங்காடியோ அல்லது ஒழுங்கு முறை விற்பனை கூடமோ அமைத்துதர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story