தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்


தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 March 2022 9:42 PM IST (Updated: 7 March 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் கோடை வெயிலை பயன்படுத்தி தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெகமம்

நெகமம் பகுதியில் கோடை வெயிலை பயன்படுத்தி தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தென்னை நார் உற்பத்தி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலானவர்கள்  தென்னை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பச்சை தேங்காய் மட்டையில் இருந்து வெள்ளை நிற நாரும், காய்ந்த கருப்பு மட்டையில் இருந்து கருப்பு நிற நாரும் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பெரும்பாலான நார் கயிறு கேரளாவிற்கும், சீனாவிற்கும் ஏற்றுமதி ஆகிறது.

உலர வைக்கும் பணி தீவிரம்

தென்னை மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாரை வெயிலில் காயவைப்பது அவசியம். தென்னை நார் வெயிலில் நன்றாக உலர்ந்தால் தான் அதனுடைய தரம் அதிகமாக இருக்கும். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெகமம் வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக அதிகளவில் தென்னை நாரை உலரவைக்கும் பணி மந்தமாக இருந்தது.

தற்போது கோடை வெயில் அதிகளவில் இருப்பதால், இதனைப்பயன்படுத்தி நெகமம் வட்டார பகுதியில் உள்ள நார் தொழிற்சாலைகளில் தென்னை நார் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்குள்ள களத்தில் தென்னை நார் உலரவைக்கும் பணியிலும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story