போதை ஆசாமி மாநகர பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்


போதை ஆசாமி மாநகர பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 8 March 2022 3:32 PM IST (Updated: 8 March 2022 3:32 PM IST)
t-max-icont-min-icon

போதை ஆசாமி டிக்கெட் எடுக்காமல் மாநகர பஸ் கண்டக்டரை தாக்கிவிட்டு, பஸ்சின் ஜன்னல் கண்ணாடியையும் உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

திருவான்மியூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்டிரல் நோக்கி மாநகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணித்த போதை ஆசாமி ஒருவரை டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் வடிவேலு கேட்டார். அந்த போதை ஆசாமி டிக்கெட் எடுக்காமல் கண்டக்டர் வடிவேலுவிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே பஸ்சை நிறுத்தி போதை ஆசாமியை பஸ்சை விட்டு இறங்கும்படி வடிவேலு வற்புறுத்தியதாக தெரிகிறது.

திடீரென போதை ஆசாமி கண்டக்டர் வடிவேலுவை தாக்கிவிட்டு, பஸ்சின் ஜன்னல் கண்ணாடியையும் உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கண்டக்டர் வடிவேலு திருவான்மியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை ஆசாமியை தேடி வருகிறார்கள்.


Next Story