மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சர்வதேச மகளிர் தின விழா நடக்கிறது.
விழாவையொட்டி கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்கும் 900 மீட்டர் தூரம் நடைபோட்டி நடக்கிறது. பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் பழங்குடி சமூக மக்கள் கிராமப்புற மேம்பாட்டு மையத்துக்கு சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை, மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி மற்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மேலும் தலைமை அலுவலகம், அறிஞர் அண்ணா ஆலந்தூர், கோயம்பேடு, அண்ணாநகர் கிழக்கு, வடபழனி, விம்கோநகர், தேனாம்பேட்டை, கிண்டி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. மாலை 5 மணி வரை நடக்கும் முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், மகளிர் நோய் மருத்துவம் ஆகியவை நடத்தப்படுகிறது. பெண் ஊழியர்களுக்கு நாப்கின் வழங்கப்படுகிறது.
அதைதொடர்ந்து வண்டலூரில் உள்ள ஊரக வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த குழந்தைகள் கோயம்பேட்டில் இருந்து விமான நிலையத்துக்கும், அங்கிருந்து மீண்டும் கோயம்பேட்டுக்கும் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கின்றனர் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story