ஓரிக்கையில் சுயம்வர பார்வதி ஹோமம்; சங்கராச்சாரியார் பங்கேற்பு
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
காஞ்சி சங்கராச்சாரியார் கேட்டு கொண்டபடி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாய மக்களின் நலனுக்காக மாதம் தோறும் சுயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, காஞ்சி சங்கர மடம் சார்பில் அனைத்து யாதவ சமுதாய மக்களுக்காக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் ராதிகா சந்திரமவுலி, சரண்யா கோபால், நித்யா பிரபாகர் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் திருமணமாகாத 38 ஆண்கள், 24 பெண்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வரன் தேடிக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்தது.
Related Tags :
Next Story