தி.மு.க. பொதுச்செயலாளர் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி


தி.மு.க. பொதுச்செயலாளர் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 March 2022 8:07 PM IST (Updated: 8 March 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பொதுச்செயலாளர் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவபடத்திற்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி.எம்.கதிரவன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட பிரதிநிதிகள் ஆப்பூர் சந்தானம், அஞ்சூர் ராஜேந்திரன், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரைபாபு, ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம் ஆகியோர் கலந்துக்கொண்டு 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள். விழாவில் வார்டு உறுப்பினர்கள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story