வால்பாறையில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் இருந்து குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் முருகன் எஸ்டேட் பிரிவு அருகே நேற்று மாலை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைதுறையினரும், எஸ்டேட் நிர்வாகத்தினரும் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதற்கிடையில், சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அரசு பஸ்சில் குரங்குமுடி எஸ்டேட் சென்றவர்கள் பாதியில் இறங்கி, சுமார் 4 கி.மீட்டர் நடந்தே வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் சாலையில் கிடந்த மரம் அகற்றப்பட்டதும், போக்குவரத்து சீரானது. இதனால் குரங்குமுடி எஸ்டேட் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






