கொப்பரை தேங்காய் விலை உயர்வு
ஆனைமலையில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி
ஆனைமலையில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதை நெகமம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதன் காரணமாக கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-
கிலோவுக்கு ரூ.11 விலை உயர்வு
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு 102 விவசாயிகள் 690 மூட்டை கொப்பரை தேங்காயை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதை 7 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
அதன்படி 378 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.91 முதல் ரூ.102.55 வரையும், 312 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.79.10 முதல் ரூ.89.60 வரையும் ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட 39 மூட்டை வரத்து அதிகரித்தது. வரத்து அதிகரித்தும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.11 வரை விலை உயர்ந்தது. எண்ணெய் மார்க்கெட்டிவில் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்து உள்ளது.
மேலும் அரசு கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டதால் வெளிமார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொப்பரை தேங்காயை கொண்டு செல்வதில்லை. இதனால் வியாபாரிகளுக்கு கொப்பரை தேங்காய் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாகவும் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story