வேளச்சேரியில் துணிகரம்: வீடு புகுந்து 70 பவுன் நகை கொள்ளை


வேளச்சேரியில் துணிகரம்: வீடு புகுந்து 70 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 9 March 2022 3:24 PM IST (Updated: 9 March 2022 3:24 PM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரியில் வீட்டில் உரிமையாளர்கள் தூங்கி கொண்டிருந்தபோது வீடு புகுந்து 70 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி வீனஸ் காலனி 2-வது பிரிவு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 64). இவர், தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று காலை எழுந்த அவர்கள், பக்கத்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நேற்று அதிகாலையில் கொள்ளையர்கள், பைப் வழியாக வீட்டின் மொட்டை மாடிக்கு ஏறிச்சென்று, அங்கிருந்து வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் சீனிவாசன், அவருடைய மனைவி தூங்கி கொண்டிருந்த அறையின் பக்கத்து அறைக்குள் நைசாக புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story