திருவொற்றியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி


திருவொற்றியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
x
தினத்தந்தி 9 March 2022 3:50 PM IST (Updated: 9 March 2022 3:50 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் அருகே கன்டெய்னர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

திருவொற்றியூர்,

சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூர் கான்கார்டு சரக்கு பெட்டக முனையத்துக்கு நேற்று மாலை சரக்கு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பக்கிங்காம் கால்வாய் சாலையை ஒட்டி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மேடாக உள்ள ரெயில்வே பாதையை கடக்க முயன்றபோது எதிர்பாராவிதமாக லாரி பழுதடைந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி வந்து இடதுபுறம் உள்ள சாலையோர பள்ளத்தில் இறங்கியது. லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. லாரி வலது புறமாக இறங்கி இருந்தால் கால்வாய்க்குள் விழுந்து உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கும். சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளத்தில் இறங்கி நின்ற லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story