உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்


உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 9 March 2022 7:51 PM IST (Updated: 9 March 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளித்தனர்.

மாமல்லபுரம்,  

உலக மகளிர் தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்திருந்தது. 

இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலை 6 மணி முதல் புராதன சின்னங்களை இலவசமாக கண்டு களித்தனர். இலவச அனுமதியையொட்டி நேற்று கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டைக்கல், ஐந்துரதம் போன்ற இடங்களில் உள்ள நுழைவு கட்டண மையங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன.

குறிப்பாக, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story