கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்த ஆசாமி சிக்கினார்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக்கூறி கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்த ஆசாமி சிக்கினார்
கோவை
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக்கூறி கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்த ஆசாமி சிக்கினார்
பணம் கேட்டு மிரட்டல்
கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் சமீபகாலமாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக்கூறி ஒருவர் பணம் வசூலித்து வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர், உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த நபர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சவுரிபாளையம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள கடைகளில் பணம் கேட்டு ஒருவர் மிரட்டினார். அவரை கடைக்காரர்கள் பிடித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
போலி அதிகாரி
அதன்பேரில் சிங்காநல்லூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சொர்ணகுமார்(வயது 45) விரைந்து வந்து, அந்த நபரிடம் விசாரித்தார். அப்போது அவர் மோசடி ஆசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரித்தனர். அதில் அவர், நீலிகோணாம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த சிவக்குமார்(47) என்பதும், கடைசியாக செல்வபுரத்தில் உள்ள ஒரு கடைக்காரரை மிரட்டி ரூ.3 ஆயிரம் வாங்கியதும், 4-க்கும் மேற்பட்ட பேக்கரிகளில் பணம் பறித்ததும் தெரியவந்தது.
மேலும் மாநகராட்சியின் முன்னாள் ஒப்பந்த ஊழியர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம் கேட்டு மிரட்டியபோது சிலர் தாக்கியதில் காயமடைந்த சிவக்குமார், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story