மருத்துவ மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
கோவை
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
கோவை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
வெளிப்படையான தி.மு.க. அரசு
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு கடந்த 9 மாதங்களாக சிறப்பாகவும், வெளிப்படையாகவும் செயல்படுகிறது. 5 மாநில கருத்து கணிப்பு என்பது ஓட்டலுக்கு சென்று சாப்பிடாமல் சாப்பாட்டை வர்ணிப்பது போல் உள்ளது.
உக்ரைனில் இருந்து மருத்துவ படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களை இந்தியாவில் படிக்க வைக்க வாய்ப்பு உள்ளதா? என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் மாணவர்களை சேர்க்க இடம் இல்லையெனில் வேறு நாட்டில் படிக்க வைக்க முடியுமா? என்பது குறித்து ஆராய வேண்டும். மேலும் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.
சசிகலா இல்லாததால் தோல்வி
கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயகரமானது. அவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து போரிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. உக்ரைன் மீட்பு பணியில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்ததாக கூறப்படும் புகார் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும்.
சசிகலா இல்லாததால் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இரட்டை தலைமை செழிப்பாக இருக்காது.
தவறானது
லாபம் வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறானது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு சில இடங்களில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம், அதற்காக காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லை, துணிச்சல் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story