மகளிர் தினத்தில் பெண் போலீசை கவுரவப்படுத்திய தாம்பரம் கமிஷனர்


மகளிர் தினத்தில் பெண் போலீசை கவுரவப்படுத்திய தாம்பரம் கமிஷனர்
x
தினத்தந்தி 9 March 2022 8:05 PM IST (Updated: 9 March 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் தினத்தில் பெண் போலீசை தாம்பரம் கமிஷனர் ரவி கவுரவப்படுத்தினார்.

சோழிங்கநல்லூர்,  

சோழிங்கநல்லூர்- மேடவாக்கம் சாலையில் உள்ள தாம்பரம் காவல் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ரவி தலைமையில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், செம்மஞ்சேரியில் பணியாற்றும் சரிதா என்னும் முதல்நிலை பெண் போலீஸ் கவுரவிக்கப்பட்டார். செம்மஞ்சேரி போலீஸ்நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சரிதா, இருசக்கர வாகனத்தில் போலீஸ் நிலையத்திற்கு வருவது வழக்கம்.

அதேபோல் நேற்று வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு கிளம்பிய சரிதாவின் இருசக்கர வாகனத்தின் முன்னால், பின்னால் இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் ஒலி எழுப்பியபடி அவர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசார் சிறப்பாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கமிஷனர் ரவி தெரிவித்தார்.

Next Story