திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் பகுதியாக ரத்து
திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
திருச்செந்தூர்-பாலக்காடு-திருச்செந்தூர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் - கோவில்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் பாதை மின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (16732) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை மதுரை - திருச்செந்தூர் ரெயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த ரெயில் மதுரையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story