கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா
கன்னிவாடியில் உள்ள கோட்டை கருப்பணசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது.
கன்னிவாடி:
கன்னிவாடியில் உள்ள கோட்டை கருப்பணசாமி, மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முதல் நாளில் சானான் கேணி பகுதியில் இருந்து சாமி புறப்பாடு நடந்தது.
அப்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமி, வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தார். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. 2-ம் நாளில் ஏராளமான பக்தர்கள் சானான் கேணியில் இருந்து தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மேலும் கிடாவெட்டு நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. திருவிழாவின் இறுதிநாளான நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்தும் வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story