ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 20 பவுன் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 20 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 10 March 2022 2:15 AM IST (Updated: 10 March 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 20 பவுன் நகை திருடிய 3 பெண்கள் கைவரிசை காட்டப்பட்டது.

மதுரை, 

தஞ்சாவூர் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மனைவி ருக்குமணி (வயது 36). இவர் அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பஸ்சில் ஊருக்கு திரும்பினார். வழியில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, ரிங்ரோடு மண்டேலா நகரில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் பயணித்தார். அப்போது பஸ்சில் அவரது அருகே சுடிதார் அணிந்த 3 பெண்கள் கைக்குழந்தையுடன் இருந்தனர். அவர்கள் ருக்குமணி வைத்திருந்த பையில் இருந்து 20 பவுன் தங்க நகையை நைசாக திருடிவிட்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ருக்குமணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் உடன் பயணத்த பெண்ணிடம், நகை திருடிய 3 பெண்களை தேடி வருகின்றனர்.

Next Story