செக்யூரிட்டி நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடியில் முன்னாள் மேலாளர் கைது
செக்யூரிட்டி நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடியில் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருபவர் ஸ்ரீநாதரெட்டி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், தனது நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்த சுவரண்குமார் (வயது 29) என்பவர் கம்பெனி பணம் ரூ.4½ கோடியை மோசடியாக அபகரித்து கொண்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படியும் கூறி இருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட சுவரண்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story