காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் சங்கராச்சாரியாரிடம் ஆசி
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை மகாபெரியவர் மணிமண்டபத்தில் சங்கர மட பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் படம், குங்குமம் வழங்கி ஆசி வழங்கினார். இதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஓரிக்கை மணிமண்டபம் வளாகத்தில் வில்வம், சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகளை காஞ்சி சங்கராச்சாரியார், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆகியோர் நட்டனர்.
Related Tags :
Next Story