சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் வழக்கு: இந்திய உணவுக்கழக அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு ஜெயில்
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் வழக்கு: இந்திய உணவுக்கழக அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு ஜெயில் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு.
சென்னை,
சென்னையில் உள்ள இந்திய உணவுக்கழகத்தில் துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் துரைராஜ். கடந்த 2009-ம் ஆண்டு லஞ்சப்புகார் காரணமாக இவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லஞ்சமாக பெற்ற பணத்தில் ஏராளமான சொத்துகளை துரைராஜ் அவரது பெயரிலும், அவரது மனைவி சாருமதி பெயரிலும் வாங்கி குவித்தது அமலாக்கத்துறைக்கு தெரியவந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 1.1.2002 முதல் 30.9.2009 வரை இவர் பணியில் இருந்த காலத்தில் 54 லட்சத்து 98 ஆயிரத்து 969 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் துரைராஜ், அவரது மனைவி சாருமதி ஆகியோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி மலர் வாலன்டினா முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, துரைராஜ், அவரது மனைவி சாருமதி ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், சட்ட விரோதமாக பெற்ற பணத்தின் மூலம் சேர்த்த சொத்துகளை அரசுடமையாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story