பெற்றோரின் ஜாமீனுக்கு, போலியான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் மகள் கைது


பெற்றோரின் ஜாமீனுக்கு, போலியான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் மகள் கைது
x
தினத்தந்தி 11 March 2022 4:31 AM IST (Updated: 11 March 2022 4:31 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோரின் ஜாமீனுக்கு, போலியான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் மகள் கைது.

சென்னை,

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 34). இவரது தந்தையும், தாயும் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமீனில் விடுவிக்க, சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் திவ்யா சொத்து ஆவணங்களை தாக்கல் செய்தார். ஆனால் அந்த சொத்து ஆவணங்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு எழுத்தர் நிலவரசி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் சித்ரா இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலியான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்த திவ்யா மற்றும் அந்த போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்த கோபால் (67) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கோபால் சென்னையை அடுத்த கவரப்பேட்டையை சேர்ந்தவர். அவர் இதுபோல் வேறு ஏதாவது போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்துள்ளாரா? என்று விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story