வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை


வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 5:42 AM IST (Updated: 11 March 2022 5:42 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் என்ற டபுள் ரஞ்சித்(வயது 22). இவர் மீது செங்குன்றம், சோழவரம். வில்லிவாக்கம், ஐ.சி.எப். ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குள் உள்ளன.

பிரபல ரவுடியாக வலம் வந்த ரஞ்சித், தற்போது தனது எதிரிகளுக்கு பயந்து செங்குன்றத்தில் வசித்து வந்தார். நேற்று மாலை ரஞ்சித், அண்ணா நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலை ஆடு தொட்டி அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர், திடீரென ரஞ்சித்தை வழிமறித்து நடுரோட்டில் அவரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ரஞ்சித், அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத், வில்லிவாக்கம் உதவி கமிஷனர் சகாதேவன், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் கொலையான ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story