செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் 18-ந்தேதி போக்குவரத்து தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு


செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் 18-ந்தேதி போக்குவரத்து தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு
x
தினத்தந்தி 11 March 2022 3:11 PM IST (Updated: 11 March 2022 3:11 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் 18-ந்தேதி போக்குவரத்து தொடங்கும் என்று நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறினார்.


செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே 2 மேம்பாலங்கள் உள்ளது. இந்த மேம்பாலங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக சேதம் அடைந்தது. இதனால் பாலாற்று மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து மேம்பாலத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கிராமப்புற சாலைகளில் திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் 2 பாலங்களில் ஒரு பாலம் சீரமைக்கப்பட்டு அதில் ஒரு வழியாக மட்டும் போக்குவரத்து நடைபெற்றது.

2-வது பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று இரவு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேம்பாலங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒரு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மற்றொரு பாலத்தில் நடைபெற்று வரும் பணிகள் வருகிற 18-ந் தேதியுடன் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story