உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவனுடன் எம்.எல்.ஏ. சந்திப்பு
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவனின் வீட்டுக்கு திருப்போரூர் எம்.எல்.ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் வெள்ளையன். இவரது மகன் ராஜ்கபூர் தங்கபாண்டியன். இவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். உக்ரைனுக்கும் ரஷியாவிற்கும் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து படிக்க சென்ற மாணவர்களை மீட்டு வருவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது.
அதன் அடிப்படையில் தனது மகனை மீட்டுத் தரக்கோரி மாணவனின் பெற்றோர் தமிழக முதல்-அமைச்சர், திருப்போரூர் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு கலெக்டர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் சோகண்டி கிராமத்தை சேர்ந்த மாணவன் வீடு திரும்பினார். இந்த செய்தியை அறிந்து திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மாணவனின் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story