காஞ்சீபுரம் அருகே வீரர்களின் நினைவை போற்றும் வகையிலான கல் கண்டெடுப்பு
காஞ்சீபுரம் அருகே வீரர்களின் நினைவை போற்றும் வகையிலான தூங்குதலை என அழைக்கப்படும் தூங்குதலை கல் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக போரிட செல்லும் மன்னர், படை வீரர்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என கொற்றவையிடம் வேண்டிக்கொள்வார்கள். போரில், வெற்றி பெற்ற பிறகு, நேர்த்திகடனாக தன் தலையை தானே கொய்து, கொற்றவைக்கு அர்ப்பணிப்பார்கள். அவ்வாறு செய்யும் வீரர்களின் நினைவாக, நடுகல் வைத்து வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
இது போன்ற கற்களை ஆய்வு செய்யும் விதமாக ஆய்வு மையத்தின் தலைவரும், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான த.அஜய்குமார் என்பவரால் ஆய்வு செய்தபோது வில்லிவலம் கிராமத்தில், இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட அரிதான தூங்குதலை என அழைக்கப்படும் தூங்குதலை கல் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த வீரக்கல்லில், தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளும் வகையில், புடைப்பு சிற்பத்தை அழகாக நுட்பமாக செதுக்கி உள்ளனர்.
Related Tags :
Next Story