கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டம்
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டம் குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வாசுதேவன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அலுவலக மேலாளர் மாணிக்கம் தீர்மான நகலை வாசித்தார். மொத்தம் 43 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக மின்கட்டணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு் முதல் நவம்பர் வரை ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 821 செலுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுந்தது. மேலும் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு கொரோனா தொற்று நோய் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சிட்ட வகையில் ரூ.89 ஆயிரத்து 953 செலவு செய்ததாக நிறைவேற்ற தீர்மானம் வாசிக்கப்பட்டபோதும், கவுன்சிலர்களாகிய நாங்களே அந்த துண்டு பிரசுரங்களை கண்ணில் பார்க்கவில்லை என சில கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story