300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா உளுந்தூர்பேட்டையில் நடந்தது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா உளுந்தூர்பேட்டையில் நடந்தது. விழாவுக்கு ஒன்றியக் குழு தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.
சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடந்த விழாவில் உளுந்தூர்பேட்டை முன்னாள் நகர செயலாளர் செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் மாலதி ராமலிங்கம், சிவசங்கரி சந்திரகுமார், முருகவேல், ரமேஷ் பாபு, குரு மனோ, பூம்பொழில் தினேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story