என்.சி.சி. பி சான்றிதழ் வழங்குவதற்கான செய்முறை தேர்வு கோவை கல்லூரியில் தொடங்கியது


என்.சி.சி. பி சான்றிதழ் வழங்குவதற்கான செய்முறை தேர்வு கோவை கல்லூரியில்  தொடங்கியது
x
தினத்தந்தி 12 March 2022 8:34 PM IST (Updated: 12 March 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

என்.சி.சி. பி சான்றிதழ் வழங்குவதற்கான செய்முறை தேர்வு கோவை கல்லூரியில் தொடங்கியது


கோவை

தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. 

மேற்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், சேலம், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 85 கல்லூரிகளை சேர்ந்த 843 மாணவர்கள், 665 மாணவிகள் என மொத்தம் 1,508 பேருக்கு 

என்.சி.சி. பி சான்றிதழ் வழங்குவதற்கான செய்முறை தேர்வு கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்  தொடங்கியது.

இதில் முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடந்தது. இது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாகும். 

மேலும் மாண வர்களுக்கு அணிவகுப்பு, துப்பாக்கிகளை கையாளுதல், வரைபடம் மூலம் இடங்களை கண்டறிதல், துப்பாக்கி பாகங்களை பிரித்து மீண்டும் பொருத்துதல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

Next Story