நண்பரை கொல்ல முயன்ற மாநகராட்சி ஊழியர் கைது


நண்பரை கொல்ல முயன்ற மாநகராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 13 March 2022 8:32 PM IST (Updated: 13 March 2022 8:32 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் நண்பரை கொல்ல முயன்ற மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கணபதி

கோவை ரத்தினபுரி நாராயணசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 30). டிரைவர். இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரங்கன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (26). இவர் கோவை மாநகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 

நண்பர்களான ரஞ்சித்குமாரும், இசக்கிமுத்துவும் ஒன்று சேர்ந்து மது அருந்தும் வழக்கம் உள்ளவர்கள். நேற்று முன்தினம் ரஞ்சித்குமார் இசக்கிமுத்துவின் சகோதரியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். 

ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார். இது பற்றி இசக்கிமுத்து கேட்டபோது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் இசக்கிமுத்துவை சரமாரியாக அடித்து கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். 

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இசக்கிமுத்துவை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
1 More update

Next Story