இரவு நேர விபத்தை தடுக்க டிரைவர்களுக்கு டீ வழங்கி விழிப்புணர்வு போலீசார் நடவடிக்கை
இரவு நேர விபத்தை தடுக்க டிரைவர்களுக்கு டீ வழங்கி விழிப்புணர்வு போலீசார் நடவடிக்கை
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில் பயணிக்கும்போது டிரைவர்களின் சோர்வு காரணமாக தொடர் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா மற்றும் போலீஸ்காரர்கள் சுரேஷ், சின்னத்தம்பி ஆகியோர் அடங்கிய குழுவினர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை இரவு நேரங்களில் கடக்கும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை நிறுத்தி டிரைவர்களுக்கு டீ மற்றும் குடிநீர் வழங்கி போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது டிரைவர்களிடம் சோர்வு ஏற்படும் போது வாகனத்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் செல்ல வேண்டும் என்றும் இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை மனதில் கொண்டு பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினர். பின்னர் தங்களுக்கு டீ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசாருக்கு டிரைவர்கள் நன்றி கூறிவிட்டு மீண்டும் அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தனர்.
Related Tags :
Next Story