கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவு
கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாலக்காடு - பழனி புறநகர் (மெமு) ரெயில்கள் காலை, மதியம், மற்றும் மாலை ஆகிய 3 நேரங்களிலும் புதிதாக இயக்க வேண்டும். ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தின் மேற்குப்புறத்தில் மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் ரெயில்வே சாலையைக் கடந்து செல்ல வசதியாக சுரங்கப்பாதை ஏற்படுத்த வேண்டும்.
ரெயில ்நிலையத்தில் குடிநீர், மற்றும் மின்விசிறி அமைத்துத்தர வேண்டும். நிலையத்திலேயே பயணச்சீட்டு, மற்றும் மாதாந்திர பயணச்சீட்டு கொடுக்கும் வசதியை செய்துதர வேண்டும்.
கோவை ரெயில்வே கோட்டம்
பொருட்களை (லக்கேஜ்) பொள்ளாச்சி நிலையத்தில் ஏற்றி இறக்கும் புக்கிங் வசதியை செய்து கொடுக்க வேண்டும். ரெயில் நிலைய விரிவாக்கம் பற்றிய கோரிக்கையை மேலும் வலியுறுத்த வேண்டும். கோவை ரெயில்வே கோட்டம் உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவு கொடுத்து, அக்கோட்டத்தில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தையும் இணைக்க முயற்சி எடுத்தல் வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை பிரதமர், ரெயில்வே மந்திரி, தென்னக ரெயில்வே பொது மேலாளர், பாலக்காடு கோட்ட மேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்படும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story