தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2022 8:00 PM IST (Updated: 14 March 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கு ஞானமாரி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஞானகுமாரி தனது கணவனை விட்டு பிரிந்து 3 பிள்ளைகளுடன் குன்றத்தூரில் வசித்து வருகிறார். இதனால் மனமுடைந்த வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரதாப்(55). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story