விபசாரம் செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

மலைக்கோட்டை, மார்ச்.15-
புதுச்சேரி மாநிலம் குணிக்கம் பகுதியில் உள்ள கோரைக்கனியை சேர்ந்தவர் ராஜ்கிரண் (வயது 24). இவர் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் தங்கி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஆன்லைனில் தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று ஒரு செயலி மூலம் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ஒரு விடுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு முன் பதிவு செய்துள்ளார். அதன்படி மசாஜ் செய்வதற்காக நேற்று முன்தினம் ராஜ்கிரண் அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் 2 இளம் பெண்களை அரைகுறை ஆடையுடன் காண்பித்து இவரிடம் விபசாரத்திற்காக அணுகியுள்ளனர். இது குறித்து ராஜ்கிரண் திருச்சி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மசாஜ்சென்டர் பெயரில் விபசாரம் நடைபெற்றது தெரியந்தது. இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த கலைஞர் (37), ஓட்டல் மேலாளர் ரவி (49), 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் சத்திரம் பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story