வால்பாறை தாவரவியல் பூங்கா விரைவில் திறக்கப்படும்
வால்பாறை நகராட்சி தாவரவியல் பூங்காவின் இறுதிக்கட்ட பணிகளை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆய்வு செய்ததோடு, விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
வால்பாறை
வால்பாறை நகராட்சி தாவரவியல் பூங்காவின் இறுதிக்கட்ட பணிகளை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆய்வு செய்ததோடு, விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
தாவரவியல் பூங்கா
வால்பாறை நகராட்சியின் சார்பில் பி.ஏ.பி காலனி பகுதியில் 4.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணியான அழகுபடுத்தும் பணிகள் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நகராட்சி தலைவராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற அழகுசுந்தரவள்ளி நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமாருடன் தாவரவியல் பூங்காவின் இறுதிக்கட்ட அழகுப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை
மேலும், அவர் வால்பாறை கூட்டுறவு காலனியில் நடைபெற்று வரும் குடிதண்ணீர் தொட்டியின் கொள்ளளவு அதிகரிக்கும் பணியையும், பல்வேறு இடங்களில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணியையும் ஆய்வு செய்தார். பின்னர் தாவரவியல் பூங்கா இறுதிக்கட்ட அழகுபடுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். வால்பாறை பகுதியை பொறுத்தவரை இனிவரும் காலங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரவுள்ளதால் சுற்றுலா பயணிகளின் தேவைக்காகவும் உள்ளூர் பொது மக்களின் பயன்பாட்டிற்காகவும் விரைவில் தாவரவியல் பூங்காவை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் நகராட்சி ஆணையாளரை கேட்டுக்கொண்டார். மேலும் வருகிற கோடைக்காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு ஏதுவாக விரைவில் குடிதண்ணீர் தொட்டி கொள்ளளவு அதிகரிக்கும் பணியையும் விரைவில் முடிப்பதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையாளரை கேட்டுக் கொண்டார்.
மனுக்கள் மீது நடவடிக்கை
இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதற்கான நடவடிக்கையும் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மேற்கொண்டார்.
Related Tags :
Next Story