கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்ந்து கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. தற்போது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் சூழ்நிலையிலும் கிராமப் பகுதிகளில் விவசாயிகள் தக்காளி விவசாயத்தை மேற்கொண்டுவருகின்றனர். கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து அங்கு நடைபெறும் ஏலத்தில் விவசாயிகள் தக்காளிகளை விற்பனை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்திருந்ததால் விவசாயிகள் கவலையில் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி 4 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு ஏலம் போனது. இது நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை கிலோவுக்கு ரூ.6 அதிகரித்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story






