காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெறப்பட்ட 273 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு ரூ.53,581 மதிப்பில் 11 நபர்களுக்கு விலையில்லா சலவை பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட ரமேஷ் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.97,777 மதிப்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டரையும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,250 மதிப்பிலான காது கேட்கும் கருவிகளையும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர் சரவணன் என்பவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், வேளாண்மை எந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் இரண்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.24,91,000 மதிப்புள்ள இரண்டு அறுவடை எந்திரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story