முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர்


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர்
x
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர்
தினத்தந்தி 15 March 2022 10:00 PM IST (Updated: 15 March 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர்

கோவை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை சுகுணாபுரத்தில் உள்ள வீடு உள்பட அவருக்கு சொந்தமான, நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், கட்சியினர் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று காலையில் சோதனை நடத்தினர். இதையொட்டி அவருடைய வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடந்ததை அறிந்ததும் அ.தி.மு.க.வினர் நேற்று காலை முதலே அங்கு சாரைசாரையாக திரண்டு வந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்குள் அத்துமீறி செல்வதை தடுப்பதற்காகவும் போலீசார் அங்கு இரும்பு தடுப்பு கொண்டு அடைத்தனர். அங்கு குவிந்த அ.தி.மு.க.வினர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், அமுல்கந்தசாமி ஆகியோர் வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர். தொடர்ந்து வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போது அங்கு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் அவரை உள்ளே அனுமதிக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது அ.தி.மு.க.வினர் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டின் உள்ளே இருந்த அம்மன் அர்ச்சுனன், அமுல்கந்தசாமி ஆகியோர் வெளியே வந்து வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ.வை உள்ளே அனுப்புமாறு போலீசாரிடம் கூறினர். இதையடுத்து போலீசார் அவரை உள்ளே அனுமதித்தனர்.

Next Story