சுங்குவார்சத்திரம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது


சுங்குவார்சத்திரம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2022 6:19 AM IST (Updated: 16 March 2022 6:19 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சுங்குவார்சத்திரம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சுங்குவார் அடுத்த சிறுமாங்காடு பகுதியில் சிலர் செடி, கொடிகள் நிறைந்த மறைவான பகுதியில் பதுங்கி இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 

அதில், அவர்கள் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் சுங்குவார் சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது 23), ஜெயக்குமார்(29) விஜய்(22), வினோத்(22), காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன்(27), தினேஷ்(30) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4 கத்தி, உருட்டுக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story