குட்கா விற்ற தந்தை,மகன் கைது


குட்கா விற்ற தந்தை,மகன் கைது
x
குட்கா விற்ற தந்தை,மகன் கைது
தினத்தந்தி 16 March 2022 8:12 PM IST (Updated: 16 March 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

குட்கா விற்ற தந்தை,மகன் கைது

கணபதி

கோவை காந்திபுரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் ேராடு பகுதியில்  ரத்தினபுரி போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படியாக நடமாடிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

 விசாரணையில் அவர்கள்  துடியலூர் வெள்ளக்கிணர் பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிவாளி வெங்கடேஷ் (வயது50), அவரது மகன் கல்லூரி மாணவரான வசந்தராஜா (20) என்பது தெரியவந்தது. அவர்கள் குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 62 கிலோ குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story