கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்


கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 16 March 2022 8:19 PM IST (Updated: 16 March 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளி களுக்கான முகாம் நடந்து வந்தது. கொரோனா காரணமாக இந்த முகாம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நீலகிரி மாற்றுத்திறனாளி கள் நலத்துறை, தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரி மலர்விழி கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.

 இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச உபகரணங்களை பெறுவது உள்பட மொத்தம் 80 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத மாற்று திறனாளிகள் 2,995 பேர் என கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

கோத்தகிரி பகுதியில் இருந்து தேசிய மாற்றுத் திறனாளிகள் அட்டைக்கு 986 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் அட்டை பெறாத 320 பேர் உள்ளனர். அவர்கள் கோத்தகிரி பகுதியில் நடைபெறும் முகாம் அல்லது ஊட்டி மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.


Next Story