தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு
தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே வடவேடம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 48). டிரைவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த பழனிச்சாமியை அவரது மனைவி கலாமணி கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர், உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பு ராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story