புறாக்கள் விற்பதில் மோதல்: பட்டினப்பாக்கத்தில் வாலிபரை வெட்டி சாய்த்த நண்பர்கள் கைது


புறாக்கள் விற்பதில் மோதல்: பட்டினப்பாக்கத்தில் வாலிபரை வெட்டி சாய்த்த நண்பர்கள் கைது
x
தினத்தந்தி 17 March 2022 3:59 PM IST (Updated: 17 March 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

பட்டினப்பாக்கத்தில் வாலிபரை வெட்டி சாய்த்த நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் புறாக்களை பிடித்து விற்பனை செய்வார். பிரகாசுக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்கள் வெங்கடேஷ் (24), விக்னேஷ் (23) ஆகியோர்களுக்கும், இடையே புறாக்கள் விற்பது தொடர்பாக அடி-தடி மோதல் ஏற்பட்டது. இதையொட்டி பிரகாசை, வெங்கடேஷ், விக்னேஷ் இருவரும் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பிரகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பட்டினபாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். வெங்கடேஷ், விக்னேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். உயிருக்கு போராடும் பிரகாஷ் மீதும், கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஷ், விக்னேஷ் ஆகியோர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், அவர்கள் பெயர் ரவுடிகள் பட்டியலில் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story