வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு


வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு
x
தினத்தந்தி 17 March 2022 4:26 PM IST (Updated: 17 March 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.


வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் வனவிலங்குகளுடன் இசைந்து வாழ்தல் குறித்த விழிப்புணர்வு தெரு நாடகம் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை மற்றும் இயற்கை வனவள பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடந்தது. கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு தெரு நாடகத்தை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இயற்கை வனவள பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆனந்தகுமார், கணேஷ்ரகுராம், கருமலை எஸ்டேட் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், 


வனவர்கள் சிவக்குமார், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ஸ்வார்டு கலைக்குழுவின் கலைஞர்கள் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியக்கூடிய இடம், குடியிருப்பு பகுதியில் எவ்வாறு மனித வனவிலங்குகள் மோதல் ஏற்படுகிறது. அதை தவிர்ப்பதற்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கரகாட்டம், கோலாட்டம், குறுநாடகம் மற்றும் பாடல்களுடன் விளக்கினார்கள். மேலும், வெள்ளமலை எஸ்டேட் பகுதியிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Next Story