ஆனைமலையில் பள்ளி மேலாண்மையை மேம்படுத்த கல்வி கலாசாரக்குழு
ஆனைமலை ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மையை மேம்படுத்த கல்வி கலாசாரக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மக்களை சந்தித்து விழிப்புண்ாவு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி
ஆனைமலை ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மையை மேம்படுத்த கல்வி கலாசாரக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மக்களை சந்தித்து விழிப்புண்ாவு ஏற்படுத்தினர்.
கல்வி கலாசாரக்குழு
ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுவினை அமைத்து மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி கலாசாரக்குழு- மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக்குழுவானது பள்ளியில் என்ன வகையான பணிகளை செய்ய உள்ளது என்பது பற்றியும், பெற்றோர், மாணவர், ஆசிரியர், பள்ளி ஆகியவை இணைந்த கூட்டு முயற்சி எடுத்துபள்ளியை மேம்படுத்துவதுடன், கற்றல், கற்பித்தல் நிகழ்ச்சி சிறப்பாக அமைய எந்தவகையில் எல்லாம் உறுதுணையாக இக்குழு அமைய உள்ளது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கலை வடிவங்களில் விழிப்புணர்வு
மேலும், கலாசார குழுவினர் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆடல், பாடல் கலந்துரையாடல், நாடகம் என பலவேறு கலை வடிவங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளி மேலாண்மைக்குழுவின் அவசியம் அதன் பணிகள் அமைப்புமுறை உறுப்பினர்கள் குழுவிற்கான தேர்தல் என அனைத்து அம்சங்களையும் கலைவடிவங்களைக்கொண்டு மக்களிடம் விளக்கப்பட்டது.
ஆனைமலை வட்டாரத்தில் மொத்தம் 7 நாட்கள் நடக்கும் இக்கலைக்குழுவினை ஆனைமலை வட்டாரக் கல்வி அலுவலர்கள் சின்னப்பராஜ், எடிசன் பெர்னார்டு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயந்தி, ஆசிரியர் பயிற்றுனர் சரோஜினி ஆகியோர் வழிகாட்டுதலின் படி இந்நிகழ்வு நடக்கிறது. கலைக்குழுவின் பயணத்தை ஆசிரியர்கள் விசுவநாதன், கருப்பசாமி ஆகியோர் ஒருங்கிணைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story